என் இதய வாழ்வினிலே
உன் அன்பு பெருக
அமலமரி மைந்தர் எம்மில்
அருள் நிரம்பி வருக
சேயாக எமை எடுத்து
அருள் முத்தம் தருக -தாயே
உமை அன்றி வேறில்லை
அன்புதனில் சிறக்க
கரம் உண்டு, கலை இல்லை
நாவுண்டு, சுவையில்லை
பொருள் உண்டு விலை இல்லை
உன் அகம் இன்றி அருள் இல்லை- அமலமரியே
உன் அன்பின்றி இவ் உலகில்லை
பனையின் உயரம் கொண்டு
பாவமே உவகை என்று
வாழ்வுதனைத் தொலைத்தோம்
அம்மா என்று சொல்லி
பரிந்து பேசவிடுத்தோம் தூது
பார் நீண்ட புகழ் செய்த
பிள்ளையை கொடுத்து- சீர் செய்தீர்
எம் வாழ்வை- உம் மைந்தனை
கொலைக்களத்தில் கொடுத்து
கரம் பிடித்து நிதம் சேர்ப்பாய்
அருள் எடுத்து வைகாசி வளம் கொடுப்பாய்
அருள் கொண்ட 53 மணி சொன்ன
அருள் மிகப்பெற்ற உன்னை
கரம் குவித்து தொழுவோம் நாளும்….
Bro. Rubeshan CMF


0 Comments