Header Ads Widget

Responsive Advertisement

இன்றைய புனிதர்



 

இன்றைய புனிதர்

2021-05-17

புனித பாஸ்காலீஸ் பேலோன் (St.Paschalis Baylon)

குரு

 


பிறப்பு

16 மே 1540
டோரேஹெர்மோசா (Torrehermosa), அரகோனியா(Aragonien)


இறப்பு
17
மே 1592
வாலென்சியா(Valencia)

புனிதர்பட்டம்: 1690 திருத்தந்தை எட்டாம் அலெக்ஸாண்டர்

 

இவர் பிறந்து வளர்ந்த உடன் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பை ஏற்றார். இதனால் ஆடுகளை பராமரிக்கும் ஆயனாக கூலி வேலைக்கு சேர்ந்தார். இவர் ஒருபோதும் பள்ளிக்கூடம் போனதே இல்லை. ஆனால் இவர் தானாகவே எழுதவும், படிக்கவும் கற்றுக்கொண்டார். ஆடு, மாடுகளை வயலில் மேய்க்கும் போது கடவுளின் படைப்பை கண்டுரசித்து, அதன்வழியாக கடவுளை வழிபட்டு அவரோடு தொடர்புகொண்டார்.


தனக்கு 17 வயது நடக்கும்போது பிரான்சிஸ்கன் சபையில் ஆடு, மாடுகளை பராமரிக்கும் பணிக்காக அமர்த்தப்பட்டார். அப்போதுதான் அவர் முதன்முதலில் துறவிகளின் வாழ்வைப்பற்றி கேள்விப்பட்டு, அவர்களைப்பற்றி தெரிந்துக்கொண்டார். இதனால் இவர் பிரான்சிஸ்கன் சபை சகோதரர்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார். இவரது ஆழமான விசுவாசத்தை கண்ட அச்சகோதரர்கள் இவரை தங்கள் சபையில் சேர அனுமதித்தனர். இதனை அறிந்த அவ்வூர் மக்கள் அச்சகோதரர்களையும், பாஸ்காலிஸ்சையும் தவறாக பேசினர். இதனால் பாஸ்காலிஸ் மிகவும் வேதனைப்பட்டார். இருப்பினும் பிரான்சிஸ்கன் சபை சகோதரர்கள் அவரை ஊக்கமூட்டி, தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட அழைத்து சென்றனர். பின்னர் அச்சபை தலைமை சகோதரர் அவர்களின் அறிவுரைப்படி, இவர் பிரான்சிஸ்கன் சபை சகோதரராக வாழ முழுமனதுடன் விருப்பம் தெரிவித்தார்.

அதன்பிறகு 1564 ஆம் ஆண்டு மான்போர்ட் சபை சகோதரர்கள் பாஸ்காசிசை தங்கள் சபைக்கு கடனாக தர வேண்டி இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தனர். அவர்களின் வற்புறுத்தலால் சில வருடங்களுக்கு கடனாக மான்போர்ட் சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் ஏழ்மையில் வாழ்ந்து, எளிமையான வாழ்வை மேற்கொண்டு சில துறவற மடங்களை ஏற்படுத்தினார். அவர் ஏற்படுத்திய துறவற மடங்களில், சிறிய சிறிய பணிகளில் அமர்த்தப்பட்டு, அவற்றை திறம்பட இறைவனின் மகிமைக்காக செய்தார். அவர் மான்போர்ட் சபையில் இருந்தாலும் கூட, பிரான்சிஸ் சபையின் ஒழுங்குகளை தவறாமல் கடைபிடித்து வந்தார். மக்களிடம் மிகவும் அன்பாகவும், பாசமாகவும் இருந்தார். அவர் திவ்விய நற்கருணை பேழையின் முன் மணிக்கணக்காக அமர்ந்து செபிப்பார். அதிலிருந்துதான் அளவில்லா மகிழ்ச்சியையும், மனநிறைவையும் பெற்றார். இவருக்கும் அவ்வில்லத்திலுருந்த திவ்விய நற்கருணை பேழைக்கும் காந்தம் போன்றதொரு உறவு இருந்தது. எப்போதும் இறைவனிடம் தொடர்பு கொண்டிருந்த அவர் பரிசுத்த ஆவி திருநாளன்று இறைவனடி சேர்ந்தார். அவரது கல்லறையில் எண்ணிலங்கா அற்புதங்கள் இன்று வரை நடந்து வருகின்றது.

இவர் ஸ்பெயின் நாட்டு புனிதர்களில் மிக உயர்ந்த புனிதராக அழைக்கப்படுகின்றார். 1897 ஆம் ஆண்டு திருத்தந்தை 13 ஆம் லியோ அவர்களால் பலிபீட திருவருட்சாதனத்தின் பாதுகாவலர் என்றழைக்கப்பட்டார். இவர் இறந்த 100 வருடங்களுக்குப்பிறகு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.


Post a Comment

0 Comments