Header Ads Widget

Responsive Advertisement

திருவருட்சாதங்கள்


திருவருட்சாதங்கள்,
 தேவதிரயஅனுமானங்கள், அருள்அடையாளங்கள் எனவும் அழைக்கப்படுகிறது. திருவருட் சாதனங்கள் கடவுளின் அருளைப் பெற்றுத் தருகின்ற சாதனங்கள் என்பதை அதன் பெயரிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம்.

மக்களைப் புனிதப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலை உருவாக்கி வளர்க்கவும், இறைவனுக்கு புகழ்ச்சி நல்கவும் அருட்சதனங்களை இயேசு ஏற்படுத்தினார். அடையாளங்கள் என்ற அளவில் அவை போதனை வழங்கும் அலுவலையும் கொண்டுள்ளன. அருட்சாதனக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாகவே விசுவாசம் தேவை; ஏனெனில் அவை சொற்களாலும் சடங்குகளாலும் விசுவாசத்தைப் பேணி வளர்க்கின்றன, உறுதிப்படுத்துகின்றன, வெளிப்படுத்துகின்றன. எனவே இவைவிசுவாசத்தின் அருட்சாதனங்கள்என்று அழைக்கப்படுகின்றன.

உண்மையாகவே திருவருட்சாதனங்கள் அருளை வழங்குகின்றன. மேலும் இதே அருளை விசுவாசிகன் பயனுடன் பெறவும், இறைவனை முறையாக வழிபடவும், பரம அன்பைச் செயல்படுத்தவும் சிறந்த வகையில் இவ் அருட்சாதனங்கள் பெறுபவர்களைப் பக்குவப்படுத்துகின்றன.

திருமுழுக்கு, உறுதிபூசுதல், நற்கருணை ஆகிய மூன்று அருட்சாதனங்களும் கிறிஸ்தவ வாழ்வில் புகுமுக அருட்சாதனங்களாகவும் கடவுளின் அழைப்பை பெற்று அதில் நிலைத்து நிற்க வலிமையைத் தருகின்ற அருட்சாதனங்களாகவும் அமைகிறன. ஒப்புரவு மற்றும் நோயில் பூசுதல் அருட்சாதனங்கள் குணப்படுத்தும் அருட்சாதனங்களாக அமைகிறன . திருமணம் மற்றும் குருத்துவம் பற்றுருதியை விளைவிக்கின்ற அருட்சாதனமாக அமைகின்றன.

இந்த ஏழு அருட்சாதனங்களும் கிறிஸ்தவ வாழ்வின் எல்லா நிலைகளிலும், பிறந்தது முதல் இறக்கும் வரை நமது விசுவாச வாழ்வில் நிலைத்து நிற்க போதிய வலிமையையும் கடவுளின் அருளையும் நமக்குப் பெற்றுத்தருகிறது. சுருக்கமாக இந்த ஏழு திருவருட்சாதனங்களும் கடவுள் நமக்கருளிய கொடை எனலாம்

 

திருமுழுக்கு என்றால் என்ன?
ஜென்ம பாவத்தையும் கர்மபாவத்தையும் போக்கி, நம்மைக் கடவுளுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகளாக்குகின்ற அருள் அடையாளம். (1கொரி:6:11)

 

ஒப்புரவு என்றால் என்ன?
திருமுழுக்கிற்குப்பின் நாம செய்த பாவங்களுக்கு மன்னிப்பையும், இனி பாவம் செய்யாமல் இருக்க அருளையும் அளிக்கின்ற அருள் அடையாளம் (2கொரி:5:18-21)


நற்கருணை என்றால் என்ன?
அப்பத்தின் குணங்களுக்குள்ளேயும், திராட்சை இரசத்தின் குணங்களுக்குள்ளேயும் இயேசுக்கிறிஸ்துநாதருடைய திருஉடலும், திருஇரத்தமும், திருஆன்மாவும் தெய்வத்தன்மையும் அடங்கியிருக்கின்ற அருள் அடையாளம் (1கொரி:11:23-25)

 

உறுதிப்பூசுதல் என்றால் என்ன?
நம்மை சத்திய வேதத்தில் திடப்படுத்துவதற்காக, தூய ஆவியையும், அவருடைய அருட்கொடைகளையும் நமக்குக் கொடுக்கின்ற அருள் அடையாளம் (யோவா:15;26)

 

திருமணம் என்றால் என்ன?

ஒரு ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாக ஒருவருக்கொருவர் தம்மைக் கையளிக்கவும், பிரமாணிக்கமாக வாழவும், தங்கள் பிள்ளைகளை இறைவழியில் வளர்க்கவும், வேண்டிய அருளைத் தருகின்ற அருள் அடையாளம் (எபே:5:;21-33)

 

குருத்துவம் என்றால் என்ன?

திருப்பலி நிறைவேற்றவும், அருள் அடையாளங்களை அளிக்கவும் வழி செய்கின்ற அருள் அடையாளம் (எபி:9:11-14)

 

நோயில்பூசுதல் என்றால் என்ன?
நோயாளிகளிடம் உள்ள பாவங்களுக்கு பரிகாரமாகவும், அவர்களுடைய ஆன்மாவிற்கும் உடலுக்கும் ஆறுதலாகவும் உண்டாக்கப்பட்ட அருள் அடையாளம் (யாக்:5:14)


Post a Comment

0 Comments