இயேசுவின் திரு இருதய மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா- எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
என்றும் வாழும் பிதாவின் திருச்சுதனாகியஇயேசுவின் திருஇதயமே
புனித கன்னித்தாயின் வயிற்றில் தூய ஆவியாரால் உருவான இயேசுவின் திருஇதயமே
தேவவார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திருஇதயமே
அளவற்ற மருத்துவப் பிரதாபம் நிறைந்தஇயேசுவின் திருஇதயமே
இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகியஇயேசுவின் திருஇதயமே
அதிஉன்னத ஆண்டவரின் உறைவிடமானஇயேசுவின் திருஇதயமே
இறைவனின் இல்லமும் விண்ணகவாசலுமான இயேசுவின் திருஇதயமே
அன்புத்தீ சுவாசித்து எரியும் சூளையான இயேசுவின் திருஇதயமே
தயாளமும் சிநேகமும் நிறைந்த இயேசுவின் திருஇதயமே
சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப்பெற்ற இயேசுவின் திருஇதயமே
எல்லா ஆராதனைப் புகழ்ச்சிக்கும் முற்றும் உரியஇயேசுவின் திருஇதயமே
இதயங்களுக்கெல்லாம் அரசும், அவைகளின் மையஇடமுமான இயேசுவின் திருஇதயமே
ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திருஇதயமே
இறைத்தன்மை முழுமையாகத் தங்கிவழியும் இயேசுவின் திருஇதயமே
உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திருஇதயமே
உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச்செய்யும் இயேசுவின் திருஇதயமே
நித்திய சிகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திருஇதயமே
பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள இயேசுவின் திருஇதயமே
உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவையளிக்கும் தாராளமான இயேசுவின் திருஇதயமே
வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திருஇதயமே
எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திருஇதயமே
மரணம் வரையும் கீழ்ப்படிந்திருந்த இயேசுவின் திருஇதயமே
ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திருஇதயமே
ஆறுதல் அனைத்தின் ஊற்றான இயேசுவின் திருஇதயமே
எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திருஇதயமே
பாவங்களின் பலியான இயேசுவின் திருஇதயமே
உம்மிடம் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மீட்பான இயேசுவின் திருஇதயமே
உம்மில் இறப்பவர்களின் நம்பிக்கையானஇயேசுவின் திருஇதயமே
எல்லாப் புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திருஇதயமே
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே – 3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்
இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுள்ள இயேசுவே
எங்கள் இதயம் உமது இதயத்துக்கு ஒத்திருக்கச் செய்தருளும்மன்றாடுவோமாக
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகனின் இதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி மன்னிப்பளித்தருளும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
0 Comments