Header Ads Widget

Responsive Advertisement

நற்கருணையில் நடந்த புதுமைகள்

 


நற்கருணையில் நடந்த புதுமைகள்

     பல பேர் இப்பொழுது சொல்வது போல் நற்கருணை வெறும் பகிர்வின் அடையாளம் மட்டும் அல்ல. அது இயேசுவின் திருவுடலும் கூட. நற்கருணையில் நடந்த புதுமை என்பது கத்தோலிக்க திருப்பலியில் எழுந்தேற்றம் செய்யும்போதோ அல்லது பிட்கும் போதோ நடந்த புதுமைகள், குறிப்பாக அப்பமும், திராட்சைரசமும் இயேசுவின் திருவுடலாகவும், திருரத்தமாகவும் மாறிய நிகழ்வாகும். கத்தோலிக்க விசுவாசத்தின்படி திருப்பலியில் எழுந்தேற்றம் நடக்கும் பொழுது அப்பமும் இரசமும் வெளித்தோற்றத்தில் அவ்வாறே இருந்தாலும் கிறிஸ்து இயேசுவின் திருவுடலும் திருரத்தமுமாக மாறுகிறது. ஆனால் சில கத்தோலிக்கர்கள் கூட இதில் அவிசுவாசம் கொள்கின்றனர். மிகவும் வருந்த வைக்கும் விதமாக விசுவாசத்தை வளர்க்க வேண்டிய சில குருக்களும் நற்கருணையில் இயேசுவின் பிரசன்னம் இல்லை என்றும் அது வெறும் பகிர்வின் அடையாளம் என்றும் கூறுகிறார்கள் அல்லது மறையுரையா ற்றுகிரைர்கள்.

நற்கருணை புதுமையின் வகைகள்:

நடந்த புதுமைகளில் மிக அபூர்வமானது நற்கருணை மனித தசை போல் தோன்றியது. இத்தகைய புதுமை 8 ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் லான்சியானோ- இல நடந்தது. லான்சியானோ நிகழ்வு மட்டும் தான் அப்பம் இயேசுவின் திருவுடலான நற்கருணை புதுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக நற்கருணை புதுமை என்பது, நர்கருணையிலிருந்து இரத்தம் கசிவதாக மட்டும் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. நற்கருணையாக மாற்றப்பட்ட அப்பம்(எழுந்தேற்றம் செய்யப்பட்ட அப்பம்) பல நூறு வருடங்களாகியும் கேடாமளிருப்பது, நெருப்பினாலும் பாதிக்கப்படாமளிருப்பது, திருடப்பட்ட நற்கருணை மறைந்து தேவாலயத்தில் தோன்றுவது, நற்கருணை மிதப்பது அல்லது பறப்பது ஆகியவை வேறு சில புதுமைகளாக கருதப்படுகிறது.

லான்சியானோவில் நடந்த புதுமை:

ஏறத்தாழ கி.பி. 700 ஆம் ஆண்டில், இத்தாலியில் லான்சியானோ நகரிலுள்ள பரிசுத்த லெகான்தியான் ஆலயத்தில் இலத்தீன் வழி திருப்பலி நிறைவேற்ற ஒரு பேசிலியன் குருவானவர் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு புளியாத அப்பத்தில் இயேசுவின் திருவுடல், திருரத்த எழுந்தேறும் என்பதை நம்புவதில் சிரமம் இருந்தது. அவர் திருப்பலியில் அர்ப்பண வார்த்தைகள் (இது என் உடல்…….. , இது என் இரத்தம்……..) கூறுகையில், அவை அப்பம் உயிருள்ள உடலாகவும், திராட்சைப்பழ இரசம், ஒழுங்கற்ற வடிவமும், வெவ்வேறு அளவும் கொண்ட ஐந்து திவலைகளாய் திரண்ட உயிருள்ள குருதியாக மாறுவதைக்கண்டர். (ஐந்து என்பது இயேசுவின் திருக்காயங்களின் எண்ணிக்கை, அதன் வழியாகத்தான் பெருவாரியான இரத்தம் வெளியேறியது). அவர் குழப்பமும், அச்சமும் கொண்டவராய், சற்று நேரம் தெய்வீக மெய்மயக்கத்ததில் நின்றார். அனால் சற்று நேரத்தில் அவர் திருவழிபாட்டு குழுவினர் பக்கம் தன் முகத்தை திருப்பி ” நமதன்பு இயேசு கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும் பாருங்கள்” என்று கூறினார். அந்த வார்த்தையைக் கேட்ட திருவழிபாட்டினர் பீடப்பகுதிக்குள் ஓடிவந்து கடவுளின் இரக்கத்தை இரஞ்ச ஆரம்பித்தனர். அந்த புதுமை புளிக்காத அப்பம் (Unleavened bread) புனிதப்பலிக்கு ஏற்ற பொருள் என்பதை அவருக்கு நிரூபித்தது. சில ஆண்டுகளுக்குப் பின் மற்றொரு பேசிலியன் துறவி, பங்கு ஆலயத்தின் ஆவணம் பேணும்(Archives) பகுதியிலிருந்த இது தொடர்பான ஆவணத்தை திருடிவிட்டார்.
1574 ஆம் ஆண்டிலிருந்து பல தேவாலயப் புலனாய்வுகள் இந்த புதுமையில் மேற்கொள்ளப் பட்டுவிட்டன. இந்தப் புதுமைக்கான ஆதாரங்கள் இன்றுவரை லான்சியானோவில் உள்ளது. உடற்கூறியியல்(Anatomy), நோய்க்கூறு அறிவியல்(Pathology), நுண்ணுடற்க்கூறியல்(Histology), வேதியியல் மற்றும் மருத்துவ நுண்ணோக்கியல்(Clinical Microscopy), இவைகளில் பேராசிரியரான, பேராசிரியர் ஒடோர்டோ லிநோலி(Odoardo linoli) மற்றும் siena பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், றக்கேறோ பெர்ற்றெலி (Roggero Berteli) இப்புதுமையில் அறிவியல் புலனாய்வுகளை மேற்க்கொண்டனர். அதன் அறிக்கை 1971 ஆம் ஆண்டில் “Querdeni Scalvo di Diagnositica clininca e di Laboratori”ல் வெளியிடப்பட்டு, உலக நல அமைப்பு (World Health Organization) ன் உயர் வாரியத்தால் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் குழுவினால் மறு ஊர்சிதப்படுத்தப்பட்டது. அதன் முடிவுகள் ஆவன:

  1. இப்புதுமையின் தசை உண்மையான தசை இரத்தம் உண்மையான இரத்தம்.
  2. இந்த தசையும் இரத்தமும் மனித பிரிவினை சார்ந்தது.
  3. இந்த தசை இதய நார்த்தசையைக்கொண்டுள்ளது, இது போளியயிருப்பது மிகுந்த அசாத்தியம், அதாவது மிக அதிக சிரமத்துடன் தலை சிறந்த வல்லுனர்களால் மட்டுமே இதை செய்ய முடிந்திருக்கும். (அக்காலத்தில் அந்த அளவிற்கு அறிவியல் வளர்ச்சி இல்லை).
  4. இந்த தசையில், மையோகார்டியம், என்டோகார்டியம், வேகஸ் நரம்பு மற்றும் பருத்த மையோகார்டியும் தடிமனில் இடது வெண்ட்றிக்கிளும் இருக்கின்றன. இந்த தசையானது இதன் இன்றியமையாத கட்டமைப்பின் படி ஓர் இதயம்.
  5. இந்த தசையும், இரத்தமும் ஒரே இரத்த பிரிவை (AB ஐ) ப்பெற்றுள்ளன. இயேசுவின் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட இயேசுவைப்போதிந்த துணி மற்றும் மற்ற நற்கருணைப் புதுமைகளிலும் காணப்படும் இரத்தப் பிரிவும் இதுவே.
  6. சாதாரணக் குருதியில் உள்ளதைப் போன்று சரியான விகிதாச்சாரங்களில் புரதங்கள் இந்த குருதியிலும் உள்ளது.
  7. குளோரைடுகள், பாஸ்பரஸ், மெக்னீசியாம் , பொட்டாஷியம், ஸோடியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் காணப்படுகின்றன.
  8. இந்த இரத்தம் அல்லது தசையை கெட்டுப்போகாமல் காப்பதற்குப் பொருட்களோ அல்லது காரணிகளோ பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஒரு தடயமும் இல்லை (பயன்படுத்தப்படவில்லை).

இந்த புதுமையை (அற்புதத்தை) இன்றும் காணலாம். இன்று இலத்தீன் தேவாலயங்களில் பயன்படுத்தப்படும் பெரிய அப்பத்தின் அளவிலான இந்த அப்ப-தசை, நார் பொருளாகவும்(fibrous), இளம் பழுப்பு நிறத்திலும், பின்புறமிருந்து ஒளியூட்ட இளஞ்சிவப்பு நிறத்தையும் அடைகிறது. இரத்தமானது ஐந்து திரண்ட திவலைகளாக களியுடன் கலந்த இரும்புத்துருவின் பழுப்பு நிறத்தில் உள்ளது.

போல் ஸினா- அர்வியற்றோ (Bolseno-Orvieto)

1263 ம் ஆண்டு ப்ரேகு (Praque) ஐ சேர்ந்த பீற்றர்(Peter) உரோமிற்கு திருப்பயணம் சென்றபோது போல் ஸினா வில் (Bolseno) நிற்கிறார். அவர் ஒரு பக்திமிக்க குரு என்று சொல்லப்படுகிறார், இருந்தபோதிலும் அப்பத்தின் மாற்றத்தில் அவருக்கு ஐயம் இருந்தது. பரிசுத்த கிறிஸ்ற்றினா கல்லறையில் அவர் திருப்பலி நிறைவேற்றும் போது, வார்த்தையளவில் மட்டும் (உருக்கமில்லாமல்) எழுந்தேற்ற வார்த்தைகளைச் சொன்னபொழுது அப்பம் கொடூரமாக இரத்தம் வடிக்க ஆரம்பித்தது. உடனே ப்ரேகுவை சார்ந்த அந்த பீற்றர் அந்த அப்பத்தை பொதிந்து உடனடியாக அருகிலிருந்த பேரூர்(town) அர்வியற்றோ(Orvieto)ல் இருந்த பாப்பானவர் நான்காம் அர்பனிடம் (Urban) எடுத்து சென்றார். பரிசுத்த தந்தை, மெய்யாகவே நற்கருணை புதுமை நடந்திருந்தது என்று முடிவு செய்தார். இந்த புதுமையை சிறப்பிக்கும் வகையில் அவர் ஒரு புதிய திருநாளை ஏற்படுத்தி கிறிஸ்த்துவின் திருவுடல் திருநாள் (Corpus Christi) என்று அழைத்தார். இது இன்று வரை இருக்கிறது.

 

சேன்றரம், (Santarem), போர்ச்சுக்கல் 13 ம் நூற்றாண்டின் நடுப்பகுதி

சேன்றரம் சேர்ந்த ஒரு பெண்மணி தனது கணவன் தனக்கு அவநம்பிக்கையாக இருப்பதாக கருதியதால் துர்மந்திரவாதியின் (குறிசொல்பவன் அல்லது செய்வினை செய்பவன் என்றும் கொள்ளலாம்) ஆலோசனையை நாடினாள். அந்த துர்மந்திரவாதி ஒரு நற்கருணையை கேட்டார். அதை கொண்டு வருகையில் அவள் தனது கணவனின் அன்பைப் பெற்று விடுவாள் என்று கூறினான். அந்த பெண்மணி அவளிடம் எதை செய்யக் கேட்க்கப்பட்டிருக்கிறதோ அது திட்டவட்டமாய் தவறு என்றும் உணர்ந்தாள். ஆயினும் அவள் திருப்பலிக்கு சென்று நற்கருணையை பெற்றுக்கொண்டாள், ஆனால் இதயத்தில் பெற்றுக்கொள்ளாமல் வாயிலிருந்து உடனே வெளியே எடுத்து கைக்குட்டையில் பொதிந்து கொண்டாள். அந்த அப்பமானது இரத்தம் வடிக்கிறது என்பதை கவனியாமல் அவள் தேவாலயத்தை விட்டு வெளியே விரைந்தாள். இரத்தத்தைப் பார்த்த ஒரு ஊர்வாசி அந்த பெண்தான் காயப்பட்டிருப்பதாக வருந்தி இரத்தம் வடிவதை அவள் கவனத்திற்கு கொண்டு வந்தான். அப்பம் தான் இரத்தம் வடிக்க ஆரம்பித்து விட்டதை பார்த்த அவள் அதை வீட்டிற்கு எடுத்து சென்று பேழையில்(trunk) வைத்தாள். அந்த இராவில் அவளும் அவளது கணவனும் பேழையிலிரிந்து வெளிவந்த பிரகாசமான ஒளிக்கதிர்களால் எழுந்தார்கள். பிற மக்களும் அவ்வீட்டிற்கு வந்த இந்த வினோதத்தைக் கண்டார்கள். அந்த பங்கு குரு அந்த அப்பத்தை ஆலயத்திற்கு மீண்டும் எடுத்துச்சென்று நற்கருணை பேழையில் ஒரு மெழுகு கலனில் வைத்தார். மறுமுறை அவர் பேழையை திறக்கும் போது அந்த மெழுகு கலன் உடைந்து படிகச் சிமிழல் தாங்கப்பட்டிருந்தது.

ப்ளானற்ற்(t) (Blanot), ஃப்ரான்ஸ் 1331

ப்ளானற்ற்(t) என்ற ஊர் சித்திரம் போன்ற மலைகளால் சூழப்பட்ட, நெடிய குறுகிய, பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அமைவிடத்தால் அது முக்கியத்துவமற்று (Inconspicous) இருந்த போதிலும் கடவுளால் அனுகூலம் செய்யப்பட்டது. அவர் தான் அதை நற்கருணை புதுமையால் மேன்மை படுத்தியவர். அந்த நிகழ்வின் கண்கூடான சான்று இன்றும் அது நிகழ்ந்த தேவாலயத்தில் பேணப்படுகிறது.

அந்நாட்களில், நற்கருணை பெறுவதற்காக பீடக்கிராதியில் ஒருவர் பக்கம் மற்றொருவராக முழந்தாளில் நிற்பார். இரு பீடச்சிறுவர்கள் கிராதியில் நீளவாக்கில், பீடத்தைப்பார்த்து தொங்கிக்கொண்டிருக்கும் லெனின் துணியின் கீழ் விழிம்பை எடுத்து மடித்து பிடிப்பார்கள், நற்கருணையை பெற்றுக்கொள்வோர் துணியின் அடியில் கை வைத்திருப்பார்கள் இதனால் நற்கருணை, நற்கருணை துகள்கள் தவறி விழுவது (நர்கருனையானது நேரடியாக குருவானவரால் நாவில் வழங்காப்புட்ம்) தரையில் விழாது. மீண்டும் அது வழங்கப்படும்.

இந்த புதுமையானது 1331ம் ஆண்டு மார்ச் 31 உயிர்ப்பு ஞாயிறு அன்று ப்ளானற்ற்(t) நகரின் முதன்மை குரு ஹக்யூஸ் தே லா பா(உ)மே (Hagues De La Baume) யால் நிறைவற்றப்பட்ட முதல் திருப்பலியில் நிகழ்ந்தது. புனித விழா நிகழ்வு என்பதால் பீடச்சிறுவர்களுடன், அதே பங்கை சேர்ந்த தாமஸ் கெய்லற்ற்(t) (Thomas Cailot) மற்றும் கய்யற்ற்(t) பெஸன்(Guyot Besson) என்னும் இருவர் உதவிக்கொண்டிருந்தனர். திருவிருந்தின் போது திருவிருந்தினர் அனைவரும் பீடக்கிராதிக்குச்சென்று அந்த துணியின் அடிப்பகுதியில் கையினை வைத்து குருவிற்காக எதிர் பார்த்து இருந்தனர். இறுதியில் நற்கருணையை பெறுபவர்களில் ஒருவராக ஜாக்யுற்றோ (Jaquetto) என்னும் விதவை இருந்தாள். குருவானவர் அவளது நாவில் நற்கருணையை வைத்து திரும்பி பீடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். திருப்பலியில் பங்கு கொண்டோர் பலரும், அவர்களுடன் கெய்லற்ற்(t) மற்றும் பெஸனும் அவளது வாயிலிருந்து நற்கருணை கீழே விழுந்ததை பார்த்தனர். கெய்லற்ற்(t) பீடத்திற்கு சென்று இவ்வெதிர்பாரா நிகழ்வை குருவிடம் தெரிவித்தார். அவர் கிராதியை நெருங்கிவந்து மிகச்சரியாக அப்பத்தின் அளவிலே இருந்த இரத்தப்புள்ளியைப் அந்தத்துணியில் பார்த்தார். அதுவோ இரத்தத்தில் முழுதும் கரைந்துவிட்டது போல் தோன்றியது.

திருப்பலி முடிந்த பின், குருவானவர் அந்தத் துணியை எடுத்து, குனிந்து ஒரு பாத்திரத்தில் உள்ள சுத்தமான நீரில் அந்த இரத்தப்புள்ளி இருந்த துணிப்பகுதியை வைத்தார். அவர் அந்தப் புள்ளியைப் பல முறை விரலால் சுரண்டிய பின் அது குறைவதற்குப் பதிலாக பெரிதாவதைக் கண்டார். அவர் அந்தத் துணியை எடுக்கும் போது அந்த நீர் இரத்தமயமாய் ஆகியிருப்பதைக் கண்டார். குருவானவரும் அவரது உதவியாளர்களும் ஆச்சரியமும் அத்துடன் பயமும் கொண்டு “இது நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விலை மிகுந்த இரத்தம்” என்று வியந்தனர். குருவானவர் கழுவியபின் கத்தியை எடுத்து அப்பத்தினால் ஏற்பட்ட இரத்தப்பகுதியை துணியிலிருந்து வேட்டிஎடுத்தார். அந்த சதுர வடிவ துண்டு துணியானது சங்கைக்குரிய விதமாக பீடப்பேழையில் பொருத்தப்பட்டது. இந்த புதுமையானது விசாரணை செய்யப்பட்டு, பின் பாப்பானவர் 22ம் அருள் சின்னப்பரால் உறுதி செய்யப்பட்டது. பல வருடங்களுக்குப் பின் அந்தத் துணியானது சிறப்பான கதிர் பாத்திரத்தில் வைக்கப்பட்டது. அதில் தான் அது இன்று வரை இருக்கிறது.

பிற நற்கருணை புதுமைகள்

நற்கருணை பங்கிருப்பதாக எண்ணற்ற புதுமைகள் கூறப்படுகின்றன, அவற்றுள் சில இங்கே குறிப்பிடப்படுகின்றது

ஆம்ஸ்ற்றெர்டம் (Amsterdum) லிருந்து வரும் கூற்றானது 1345ம் ஆண்டு ஒரு குருவானவர் ஓர் இறக்கும் தருவாயில் இருக்கும் மனிதருக்கு நோயில் பூசுதல் திருவருட்சாதனம் வழங்கினார். அவர் அக்குடும்பத்தினரிடம் அம்மனிதர் அதை எறிந்துவிட்டால், அவர்களும் அதை எடுத்து நெருப்பில் எறிந்து விட வேண்டுமென்று கூறினார். அம்மனிதன் அதை எறிந்து விட்டான். குருவின் வேண்டுகோள்படியே அவர்களும் அதை நெருப்பில் எறிந்து விட்டார்கள். மறுநாள் காலை ஒரு பெண்மணி தீயை குறைக்க வந்தாள். அவள் அப்பமானது விழிம்பில் ஒளியுடன் சூழப்பட்டு இருப்பதை கண்டாள். இது ஒருவாறு மனித செரிமானப் பகுதியைய்ம், தீயையும் கடந்து விட்டதாகவே தோன்றினாலும் பாதிப்பேதும் அடையவில்லை.

மற்றொரு கூற்றின்படி, பவேரியா (Bavaria)ல் உள்ள ஒரு விவசாயி, எழுந்தேற்றம் செய்யப்பட்ட அப்பத்தை திருப்பலியிலிருந்து வீட்டிற்கு அது தனது குடும்பத்திற்கு நல்ல நேரத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் கொண்டு வந்தான். இருந்தாலும் அவன் தான் செய்வது மாபரும் தவறு என்ற உணர்வினால் மனம் நொந்து பாவமன்னிப்பு பெறுவதற்காக கோவிலுக்குச் செல்ல திரும்பினான். அங்ஙனம் அவன் திரும்பியதும் அந்த அப்பமானது கையிலிருந்து பறந்து சென்று தரையில் இறங்கியது. அவன் அதைத் தேடினான். ஆனால் அவனால் பார்க்க முடியவில்லை. அவன் திரும்பிச்சென்று உடன் பல கிராம வாசிகளுடனும் குருவுடனும் வந்தான். அவர்கள் அது சற்று தொலைவிளிருப்பதைக் கண்டார்கள். அவர்களோ அதை எடுக்க குனிந்தனர். அதுவோ மீண்டும் பறந்து சென்று மிதந்த வண்ணம் தரையில் அமர்ந்து மறைந்தது. இந்நிகழ்வு ஆயருக்கு அறிவிக்கப்பட்டு அவரும் அவ்விடம் வந்து அதை எடுக்க முயல அது மீண்டும் பறந்து சற்று அதிக நேரம் தொங்கி கீழே விழுந்து மறைந்தது.


(நன்றி - https://johnrupert.wordpress.com)

Post a Comment

0 Comments