Header Ads Widget

Responsive Advertisement

நுகர்வு கலாச்சாரம் - எமது நிலை என்ன...? - Fr. மில்பர் வாஸ் CMF

 

நுகர்வு கலாச்சாரம் - எமது நிலை என்ன?

Fr. மில்பர் வாஸ் CMF


மனித வாழ்வின் நகர்வுகளையும் போக்கையும் சிந்திக்கின்ற போது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு கருத்தமைவு மனித வாழ்வின் தன்மையை வெளிப்படுத்தியிருப்பதை நாங்கள் காணலாம். 17ம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த ஒரு மெய்யியலாளர் Renney Degard என்று சொல்லக் கூடிய அந்த மெய்யியலாளருடைய ஒரு சொல்லாடல் அது என்னவென்று சொன்னால் "Cogito Ergo Sum"  "நான் சிந்திக்கின்றேன் எனவே நான்" "I think, thereore I am" என்ற அந்த சொல்லாடல் அக்காலகட்டத்திலே மக்களுடைய சமூக வாழ்விலே உறவுகளிலே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடிய வரலாற்றை நாங்கள் பார்க்கலாம். 

1990களிலே பொதுவுடமை மறைந்து முதலாளித்துவ பொருளாதாரத்தின் செல்லப்பிள்ளையான உலக மயமாக்கள் கருத்தமைவின் சொல்லாடலாக இன்று வரை இருந்து எங்களுடைய வாழ்விலே சமூக வாழ்விலே உறவுகளிலே தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கக் கூடிய ஒரு சொல்லாடலாக இருப்பது "I buy, therefore I am" "நான் வாங்குகின்றேன் எனவே நான்".  அல்லது "நான் நுகர்கின்றேன் எனவே நான். "I shop, therefore I am". "I conceive, therefore I am". என்ற அந்த சொல்லாடல் இன்று மனித உறவுகளிலே தாக்கத்தை ஏற்படுத்துவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இந்த கோவிட் 19 க்கு பின்னேயான காலச்சூழலிலே இன்னுமொரு சொல்லாடல் மனித உறவுகளிலே தாக்கத்தை  ஏற்படுத்துமோ என்ற பயமும் எங்கள் மத்தியிலே வந்து கொண்டிருக்கலாம். அந்தச் சொல்லாடல் இப்படியாகக் கூட இருக்கலாம் அன்புக்குரியவர்களே, "I distance myself, therefore I am" " நான் விலகியிருக்கின்றேன் எனவே நான்"  என்ற அந்த சொல்லாடல் மனித உறவுகளிலே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அந்த ஐயப்பாடு இருந்தாலும் நாங்கள் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கூடிய இந்த நுகர்வு கலாச்சத்தின் சொல்லாடலாகிய "நான் வாங்குகின்றேன், நான் நுகர்கின்றேன் எனவே நான்" என்ற அந்த சொல்லாடல் எங்களுடைய வாழ்விலே, உறவுகளிலே, சிந்தனைகளிலே எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி எங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து வைக்கின்ற ஒரு சூழலை உருவாக்கியிருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இன்றை சமூக ஊடகங்களிலே வருகின்ற விளம்பரங்களை நாங்கள் பார்க்கலாம். பாருங்கள், அந்த விளம்பரங்கள் வனப்பு வாய்ந்த சொற்கள், மனதைக் கவரும் கவர்ச்சிகரமான வார்த்தைகள். என்னவென்று சொன்னால் மக்களே! "பொருட்களை வாங்குங்கள், வாங்குங்கள்". நீங்கள் அதிகம் வாங்க வாங்க அதிலும் அதிகப் பணம் கொடுத்து வாங்க வாங்க நீங்கள் மதிக்கப்படுவீர்கள். அங்கீகரிக்கப்படுவீர்கள். இல்லையென்று சொன்னால், நீங்கள் இந்நுகர்வுக் கலாச்சாரத்திலே மதிப்பிழந்தவர்கள்  என்ற அந்த பிழையான கற்பிதத்தை நாங்கள் பார்த்துக் கொண்டிக்கின்றோம். வாழ்வில் வெற்றி வேண்டுமா? நீங்கள் அழகைப் பெற வேண்டுமா? நீங்கள் வியாபாரத்தில் உச்சநிலையை அடைய வேண்டுமா? எத்துறையிலும் நீங்கள் முன்னேற வேண்டுமா? எங்களுடைய பொருட்களை வாங்குங்கள். "வாங்குங்கள், புதிய புதிய பொருட்களை நவீன பொருட்களை வாங்குங்கள்". அதிக பணம் கொடுத்து வாங்க வாங்க நீ உயர்நிலைக்கு போகின்றாய் என்ற அந்த கற்பிதம் இந்த கலாச்சாரத்திலே எங்களுக்குள் உட்புகுத்தப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ஒரு துர்ப்பாக்கிய நிலையை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். 

இந்தக் கலாச்சாரம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஜடப்பொருளை அன்பு செய்ய எங்களை தூண்டுகின்ற அதே நேரம் கடவுளின் உன்னதப் படைப்பான இயற்கையையும், உயிரினங்களையும், படைத்தவனின் சாயலைத் தாங்கி நிற்கின்ற மனிதனையும் பயன்படுத்த சொல்லி நிற்கின்றது அன்புக்குரியவர்களே. அது தான் இந்த நுகர்வுக் கலாச்சாரத்தில் இப்பொழுது அரங்கேறிக்கொண்டிருக்கின்றது என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது. பொருட்களை அன்பு செய்கின்ற மனித குலம் மனிதனையும், இயற்கையையும், உயிரினங்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றான்.

21வது நூற்றாண்டின் உலக மயமாக்கல் கருத்தமைவு ஒரு பக்கம் உலகையே ஒரு குக்கிராமமாக சுருக்கி இணைத்திருக்கின்றது. மறுபக்கம் சமூகங்கள் சிறுசிறு குழுமங்களாகப் பிரிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்தப் பிளவுகளும், அந்நியப்படுத்துதலும் சமூக வாழ்வில் ஒரு மோதல் சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. அடுத்தவர் என்பது எதிரே நிற்கின்ற கற்பிதம் செய்யப்பட்டு தனி வாழ்க்கை எங்கும் பரவிக் கிடக்கின்றது.

அன்புக்குரியவர்களே!. இக்கலாச்சாரத்தின் ஒரு வடிவம் தான் "கண்டுகொள்ளாத்தன்மை". கத்தோலிக்க திருச்சபையினுடைய தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்நாட்களிலே பாவிக்கின்ற ஒரு சொல் indifference அதாவது கண்டு கொள்ளாத்தன்மை. அடுத்தவனுக்கு என்ன நடந்தாலும் எனக்கென்ன என்ற அந்த மனப்பாங்கு. திருத்தந்தை அவர்கள் கூறுவதைப் போல கண்டு கொள்ளாத் தன்மையை உலக மயமாக்க வேண்டாம். என்ற அந்த அறைகூவல் எனவே பொருட்களை நாங்கள் பயன்படுத்துவோம். இயற்கையை, உயிரினங்களை, அடுத்தவனை, அயலவனை அது யாராக இருந்தாலும் ஒவ்வொரு மனிதனையும் அன்பு செய்கின்ற மனித குலமாக நாங்கள் உருமாறுவோம்.

Post a Comment

0 Comments